×

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களை யாசின் தூண்டிவிட்டதாகவும் யாசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டி குற்றச்சாட்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்ஐஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு உறுதியான நிலையில் குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.

Tags : Kashmir ,Yasin Malli ,Delhi N. GI PA Court , Kashmir Partition, Yasin Malik, Life Sentence, NIA, Court
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...